பெறுநர்
Dr. C. விஜயபாஸ்கர்,
அமைச்சர்,
சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலம்,
தமிழ்நாடு அரசு,
தலைமைச் செயலகம், சென்னை 600 009.
Email: healthminister02@Gmail.com
பெறுநர்
P. மதுசூதன் ரெட்டி I.A.S
துணை ஆணையர் (Health)
சென்னை பெருநகர கார்ப்பரேஷன்,
ரிப்பன் பில்டிங், சென்னை 600003
Email: dchealth@chennaicorporation.gov.in
பெருந்தகையீர்:
பொருள்: சென்னை காற்றைச் சுத்தம் செய்வது -- ஆரோக்கியமான நகரமே ஸ்மார்ட் சிட்டியாக இருக்க முடியும்.
காற்று மாசுபாடும், ஆரோக்கியமான காற்றுத் தரத்தைப் பேணுவதும் நெருக்கடி தருகின்ற தேசியப் பிரச்சனையாக எழுந்துள்ளதாக இந்தக் கடிதத்தைத் தங்களுக்கு எழுதுகிறோம். 2017ல் நுண்துகள் 2.5 (2.5 மைக்ரான் அளவைக் காட்டிலும் குறைவான அளவுள்ள நுண்துகள்கள்) காரணமாக உலக அளவில் 2.9 மில்லியன் மரணங்கள் ஏற்பட்டன. அவற்றில் 673,000 மரணங்கள் இந்தியாவில் மட்டும் நிகழ்ந்துள்ளன. காற்று மாசுபாட்டின் காரணமாக உடலின் ஒவ்வொரு உறுப்பும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன என்று ஆய்வுகள் காட்டியுள்ளன. குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பமடைந்த பெண்கள் காற்று மாசுபாட்டின் பாதகமான விளைவுகளால் மிக எளிதாகப் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
கடந்த நவம்பரின்போது, சென்னையின் காற்று மாசுபாடு தேசிய செய்தியானது. சென்னையின் காற்று, டெல்லியின் காற்று போல சுவாசிக்கத் தகுதியற்றதாக மாறிவிடும் என்ற கவலையை அச்செய்தி ஏற்படுத்தியது. நவம்பரில் ஏற்பட்ட நச்சு காற்றுச் சூழல் ஏதோ விதிவிலக்கான ஒன்றல்ல. சென்னையில் உள்ள மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூன்று காற்று கண்காணிப்பு நிலையங்களின் (ஆலந்தூர், IIT சென்னை மற்றும் மணலி) புள்ளிவிவரங்களின்படி சென்னை காற்றின் தரம் 35 சதவிகிதம் கால அளவுக்கு ஆரோக்கியமற்றதாகவே இருந்து வந்திருக்கிறது.
ஒட்டுமொத்த சென்னையின் காற்றுத் தரம் அபாய எல்லையை எட்டாததாகவே தென்பட்டாலும், அபாயகரமான தீங்கு விளைவிக்கும் காற்றுப் பகுதியாக ஆண்டு முழுவதும் நீடிக்கும் பகுதிகளும் இருக்கின்றன. சென்னையின் உழைக்கும் மக்களின் பெரும்பகுதி வசிக்கும் வட சென்னையின் காற்றுத் தரம் பொருத்தமற்ற விகிதத்திலான காற்று மாசுபாட்டை எதிர்கொள்கிறது. அங்கேயுள்ள காற்றின் தரம் நகரத்தின் பிற பகுதிகளின் காற்றுத் தரத்தை விட மிக மோசமானதாக இருக்கிறது. 2019ல் ஒரு நாளின் 60 சதவிகித நேரத்தில் ஆரோக்கியமற்ற காற்றை சுவாசிக்கும்படியான நெருக்கடிக்கு வட சென்னைவாசிகள் ஆளானார்கள் என்று CPCBயின் மணலி கண்காணிப்பு நிலைய தரவுகள் காட்டுகின்றன. கால் பந்தாட்டம், குத்துச் சண்டை, கபடி, சிலம்பம் என்று பல விளையாட்டுத் துறைகளின் வீரர்கள் வட சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பதால் இது மிகவும் துரதிரஷ்டமானது.
பெருநகரத்தின் மாபெரும் குப்பைக் களம் இந்தப் பிராந்தியத்தில்தான் அமைந்துள்ளது. மாநிலத்தின் மாபெரும் பெட்ரோ கெமிக்கல் தொழில் வளாகம், 3300 மெகா வாட் நிலக்கரி மின் நிலையங்கள், மூன்று மிகப் பெரிய துறைமுகங்கள், கரி சேமிப்புக் கிடங்குகள், இரண்டு நிலக்கரி சாம்பல் குளங்கள், மிகப்பெரும் எண்ணிக்கையிலான டீசல் வாகனங்கள் துறைமுகத்துக்குள்ளும் பிற ஆலைகளுக்குள்ளும் போவது, வருவது என்ற நடமாட்டம் என்ற மிகப் பெரிய அளவிலான காற்று மாசுபாட்டுக்கான காரணிகள் இப்பிராந்தியத்திற்குள் குவிந்துள்ளன.
குறிப்பாக, குழந்தைகள் மிக எளிதாக காற்று மாசுபாட்டின் பாதிப்புக்கு ஆளாவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் (World Health Orgaisation -WHO) சொல்கிறது. சிறு வயதில் காற்று மாசுபாட்டின் தாக்கத்திற்கு ஆளாவது, வாழ்வின் அடுத்த கட்டத்தில் குழந்தைகளின் உடல் வளர்ச்சியைக் குறைக்கிறது என்றும் அந்த நிறுவனம் குறிப்பிடுகிறது. நுரையீரல் வளர்ச்சி, புலனுணர்வு/ அறிவு வளர்ச்சி, வளர் சிதை மாற்றம் அடைவதற்கான உடலின் ஆற்றல், நச்சு அகற்றல், உடலில் சேர்ந்த கழிவுகளை மலத்தின் வழியே வெளியேற்றுவது ஆகியவற்றையும் காற்று மாசுபாடு பாதிக்கிறது. வடசென்னையின் நஞ்சு நிறைந்த விளையாட்டு மைதானங்களில், புகையைக் கக்கும் புகைபோக்கிகளின் மத்தியில் வடசென்னை சிறார்கள்/ இளைஞர்கள் பயிற்சி செய்தபோதும், விளையாடிய போதும் அவர்கள் விளையாட்டு வீரர்கள் ஆவது குறைவதில்லை என்பது பிரமிக்க வைக்கும் உண்மையாக இருக்கிறது.
12, ஜனவரி 2020ல் நாங்கள் "காத்த வரவிடு" (Let Chennai Breathe) என்ற இசை வீடியோவை வெளியிட்டோம். சென்னையின் காற்றுத் தரம் வீழ்ந்து வருவதன் மீது கவனத்தை ஈர்ப்பது இந்த வீடியோவின் நோக்கமாகும். வடசென்னையின் கபடி பயிற்றுநர் ஒருவர், பகுதியின் மாசுபாடு காரணமாக இன்றைய சிறார்களின் உடல் வலுவும், தாக்குப் பிடிக்கும் திறனும் குறைந்துவருவது குறித்து கவலைப்பட்ட உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
டெல்லியைப் போல அல்லாமல் நல்ல காற்றோட்டமுள்ள கடற்கரை நகரமாக சென்னை இருக்கிறது. இப்படியான நல்ல வாய்ப்பைப் பெற்ற சென்னை மோசமான காற்றுத் தரத்தால் பாதிக்கப்படுகிறது என்றால், காற்றை மாசுபடுத்தும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பற்றாக்குறையாக உள்ளன என்று பொருளாகும்.
பெருநகரத்தின் சுகாதாரத்தைப் பராமரித்து மேம்படுத்துவதற்கான அதிகாரம் கொண்டதாக பொது சுகாதாரத் துறை இருக்கிறது. மாசுபாடு எங்கே தோன்றுகிறது அதனைக் கட்டுப்படுத்துவதும் பொது சுகாதாரத் துறையின் அதிகாரத்திற்குள் வருவதாகும். காற்று மாசுபாட்டினை ஏற்படுத்தும் புள்ளிகள் தொல்லை அளிப்பவை என்று குறிப்பிட்டுச் சொல்கின்ற மாநில பொது சுகாதாரச் சட்டம் (The state Public Health Act ) அவற்றை சுகாதாரத்துறைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் சொல்கிறது.
கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும், மாசுபாட்டைக் குறைப்பதற்கும் காலவரையறையுடன் கூடிய திட்டம் ஒன்றை மேற்கொண்டால், பெருநகரவாசிகளுக்கு ஆரோக்கியமான காற்றை சுவாசிப்பதற்கு அளித்த இந்தியாவின் முதல் நகரம் என்ற பெருமையை சென்னை பெருநகரம் பெறும். பின்வருவனவற்றைச் செய்து தர வேண்டும் என்று நாங்கள் உங்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்:
a) பெருநகரத்தின் காற்றுத் தரத்தை மேம்படுத்த காலவரையறையுடன் கூடிய திட்டம் ஒன்றை நிறைவேற்றுவேன் என்று பிரகடனம் செய்தல்;
b) தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939, பிரிவு 41ல் குறிப்பிட்டுள்ளபடி தொந்தரவுகளை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மீது, குறிப்பாக மணலி- எண்ணூர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுத்து பெருநகரத்தின் தொழிற்சாலை பகுதிகளில் காற்றில் தரத்தை மேம்படுத்த கவனம் குவிப்பது.
தங்கள் உண்மையுள்ள,
To: Dr. C. Vijaya Baskar
Minister, Health, Medical Education and Family Welfare
Government of Tamil Nadu
Secretariat, Chennai 600 009
Email: healthminister02@Gmail.com
To: P. Madhusudhan Reddy, I.A.S
Deputy Commissioner (Health)
Greater Chennai Corporation
Ripon Building, Chennai 600003
Email: dchealth@chennaicorporation.gov.in
Sirs:
Subject: Clearing up Chennai's Air -- Healthy City is a Smart City
We are writing to you as air pollution and the maintenance of healthy air quality is a pressing national public health issue. In 2017, long-term exposure to PM 2.5 (Particulate Matter measuring less than 2.5 microns) caused 2.9 million deaths worldwide, of which India alone accounted for 673,000 deaths. Research has shown that air pollution adversely affects every organ in the body. Children, elderly and pregnant women are particularly vulnerable to the ill-effects of air pollution.
Last November, the poor air quality in Chennai made national news spurring concerns that Chennai's air may become unfit to breathe like Delhi's. The toxic November air was not an aberration. In 2019, Chennai's air quality was unhealthy 35% of the time, according to data collated from city’s three Central Pollution Control Board monitoring stations (Alandur, IIT-Madras and Manali).
While overall, Chennai’s air quality may not seem to be in red, there are pockets that have severe to hazardous air throughout the year. North Chennai, home to a majority of Chennai's working poor, bears a disproportionate burden of pollution and has an air quality that is far worse than the rest of the city. In 2019, residents in North Chennai were forced to breathe unhealthy air for 60% of the days, according to data from CPCB’s Manali air monitoring station. This is unfortunate because even now, many sportspersons -- footballers, boxers, Kabaddi players and Silambam artists -- come from North Chennai. Already, this region has the city's largest garbage dump, the state's largest petrochemical industrial complex, 3300 MW of coal-based power plants, three large ports, coal stacking yards, two coal ash ponds and a large population of heavy diesel vehicles moving to and from the ports and the various industries in the region.
According to the World Health Orgaisation (WHO), children are particularly vulnerable to air pollution, and exposure to poor air quality and limit their growth in later life. Air pollution can interfere with the biological process of lung growth, cognitive development and the body’s ability to metabolize, detoxify, and excrete the toxicants contained in it. Ironically, children from North Chennai become athletes despite the fact that they play and practise in poisoned playgrounds with smoke-belching chimneys as the backdrop.
On 12 January, 2020, we launched the music video "காத்த வர விடு: Let Chennai Breathe" to draw attention to the city's declining air quality. The song is inspired by a true story of regret of a Kabaddi coach from North Chennai that air pollution has hurt the stamina and endurance of today's kids.
Unlike Delhi, Chennai is better ventilated thanks to its location on the coast. If the city suffers from poor air quality despite this advantage, it is an indication that not enough is being done to regulate polluting activities.
The public health department of the city is empowered and required to maintain the city in a healthy state, including by regulating sources of pollution. The state Public Health Act specifically identifies sources of air pollution as a nuisance to be regulated by the health department.
With a time-bound plan to improve regulation and curb pollution, Chennai can become the first of India's major metropolises to give its residents healthy air to breathe. We urge you to:
a) declare that you commit to a time-bound plan to bring the city's air quality to healthy levels;
b) focus on improving air quality in the industrialised parts of the city, particularly the Manali-Ennore industrial cluster, to ensure action on industries that are causing a nuisance as defined in Section 41 of the Tamil Nadu Public Health Act, 1939.
Sincerely,
Latest Signatures
393 | RAVI K. | Jun 04, 2021 |
392 | Venkat S. | Dec 29, 2020 |
391 | Manoj K. | Oct 10, 2020 |
390 | Mugunda H. | Jul 05, 2020 |
389 | Yogi J. | Jul 04, 2020 |
388 | Karunambal K. | Jun 15, 2020 |
387 | Ulaganambi K. | May 18, 2020 |
386 | Mehar A. | Mar 08, 2020 |
385 | Saravanan P. | Feb 20, 2020 |
384 | Nandhini S. | Feb 18, 2020 |
383 | Mittinti R. | Feb 13, 2020 |
382 | Prem K. | Feb 13, 2020 |
381 | Prem K. | Feb 13, 2020 |
380 | Brucelee J. | Feb 12, 2020 |
379 | Chandran E. | Feb 12, 2020 |
378 | Sathya S. | Feb 12, 2020 |
377 | Rani S. | Feb 11, 2020 |
376 | Harry J. | Feb 11, 2020 |
375 | Harish S. | Feb 10, 2020 |
374 | Arnav V. | Feb 10, 2020 |
373 | Jerin C. | Feb 06, 2020 |
372 | Madhurima K. | Feb 05, 2020 |
371 | Rishi K. | Feb 05, 2020 |
370 | Mathi V. | Feb 02, 2020 |
369 | Karthik V. | Feb 01, 2020 |
368 | Leke D. | Jan 30, 2020 |
367 | Abraham M. | Jan 29, 2020 |
366 | Kavin C. | Jan 29, 2020 |
365 | Paul K. | Jan 29, 2020 |
364 | Gowtham J. | Jan 29, 2020 |
363 | Ezhil C. | Jan 29, 2020 |
362 | Beno P. | Jan 29, 2020 |
361 | Rahul P. | Jan 29, 2020 |
360 | Choudhry G. | Jan 29, 2020 |
359 | V. M. Ebin N. | Jan 29, 2020 |
358 | Praveen M. | Jan 29, 2020 |
357 | Srihari K. | Jan 27, 2020 |
356 | Saranya P. | Jan 27, 2020 |
355 | Sai mani C. | Jan 26, 2020 |
354 | Athreya R. | Jan 26, 2020 |
353 | Sidney P. | Jan 26, 2020 |
352 | Ayub Khan N. | Jan 26, 2020 |
351 | Judith R. | Jan 25, 2020 |
350 | Nithya R. | Jan 25, 2020 |
349 | Prashaant Y. | Jan 24, 2020 |
348 | Anjali P. | Jan 24, 2020 |
347 | Prasanna S. | Jan 24, 2020 |
346 | Vasan J. | Jan 24, 2020 |
345 | Sriram C. | Jan 24, 2020 |
344 | Cibi C. | Jan 24, 2020 |
<< < > >> |